/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முடக்கிய பஞ்சப்படி வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
/
முடக்கிய பஞ்சப்படி வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
முடக்கிய பஞ்சப்படி வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
முடக்கிய பஞ்சப்படி வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 06:23 AM
ராமநாதபுரம் : ஜன.,2020 முதல் முடக்கப்பட்டுள்ள பஞ்சப்படியை வழங்க வேண்டும் என ராமநாதபுரம் கோட்ட அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
ராமநாதபுரத்தில் அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் ராஜாமேல் நிலைப்பள்ளியில் நடந்தது. சங்கத் தலைவர் நாகநாராயணன் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் முகமது இஸ்சதீன் முன்னிலை வகித்தார்.
அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. முடக்கப்பட்ட பஞ்சப்படியை வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1000 த்தைரூ.5000 ஆக உயர்த்த வேண்டும். 8 வது ஊதியக்குழு அமைக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்கபொருளாளர் பற்குணன், உதவிச் செயலர்கள் வானமாமலை, சண்முகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.