/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
/
மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
ADDED : ஆக 06, 2024 04:43 AM
ராமநாதபுரம்: கடலில் மூழ்கி மாயமான ராமேஸ்ரம் மீனவர் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்க மீனவர்கள் வலியுறுத்தினர்.
ராமேஸ்வரம் பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கம் சார்பில் மீனவர் சங்க தலைவர் சகாயம், செயலாளர் எமரிட் மற்றும் மீனவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், ராமேஸ்வரம் துறை முகத்தில் இருந்து ஜூலை 31ல் நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது இலங்கை கடற்படை படகு மோதியதில் படகு மூழ்கி மீனவர் மலைச்சாமி இறந்தார். அவருக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
முத்து முனியாண்டி, மூக்கையா மீட்கப்பட்டு வீடு திரும்பினர். கடலில் விழுந்து காணாமல் போன ராமச்சந்திரனை தேடும் பணி நடக்கிறது.
கடலில் மூழ்கி 5 நாட்கள் ஆகிவிட்டதால் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை.
எனவே ராமச்சந்திரன் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் ரூ.10 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.