/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடந்தனார் கோட்டை செல்லும் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
/
அடந்தனார் கோட்டை செல்லும் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
அடந்தனார் கோட்டை செல்லும் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
அடந்தனார் கோட்டை செல்லும் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 06:06 AM
ஆர்.எஸ்.மங்கலம் : திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை களக்குடி விலக்கு, களக்குடி கிராம வழியாக அடந்தனார் கோட்டை செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் அப்பகுதி கிராமத்தினர் பயனடைகின்றனர்.
இந்த ரோட்டில் முக்கியத்துவம் வாய்ந்த காளியம்மன் கோயில் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு செல்லும் ரோடு கிராவல் ரோடாக ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் அப்பகுதிக்கு செல்லும் பக்தர்களும், கிராமத்தினரும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.