/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனந்துார் அரசு பள்ளி அருகே ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்க வலியுறுத்தல்

ADDED : மே 16, 2024 06:28 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆனந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வளைவு ரோட்டில் விபத்துக்களை தடுக்க ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து ஆனந்துார், சருகணி வழியாக தேவகோட்டை செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.
இந்த ரோட்டில், ஆனந்துாரில் இருந்து சருகணி செல்லும் ரோட்டில் ஆனந்துார் கண்மாயை ஒட்டிய வளைவு பகுதி ரோட்டை ஒட்டியவாறு ஆனந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடங்கள் அமைந்துள்ளதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது.
இதனால் வளைவில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, வாகன விபத்துகளை தடுக்கும் விதமாக ஆனந்துார் அரசு மேல்நிலைப் பள்ளியை ஒட்டியவாறு உள்ள வளைவு ரோட்டில் சென்டர் மீடியன் அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.