/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பக்தர்கள் வசதிக்காக கோயில்களில் நிழற்பந்தல் அமைக்க வலியுறுத்தல்
/
பக்தர்கள் வசதிக்காக கோயில்களில் நிழற்பந்தல் அமைக்க வலியுறுத்தல்
பக்தர்கள் வசதிக்காக கோயில்களில் நிழற்பந்தல் அமைக்க வலியுறுத்தல்
பக்தர்கள் வசதிக்காக கோயில்களில் நிழற்பந்தல் அமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 06, 2024 12:32 AM
திருவாடானை : திருவாடானை, தொண்டியில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க நிழல் தரும் பந்தல் அமைக்க வேண்டும்.
திருவாடானை, தொண்டி பகுதியில் ஏராளமான கோயில்கள் உள்ளன. தற்போது திருவிழாக்கள் களை கட்ட துவங்கியுள்ளது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும் கூட கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. திருவெற்றியூரில் வெள்ளி, செவ்வாய் நாட்களில் வெளி மாவட்டங்களிலுருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக பக்தர்கள் சுற்றுப்பிரகாரம் சுற்றி வர சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க தரைவிரிப்பு, பந்தல் உள்ளிட்டவற்றை அமைக்க கோயில்நிர்வாகம் முன்வர வேண்டும்.