/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரவுநேர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
/
இரவுநேர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
இரவுநேர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
இரவுநேர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2024 04:57 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இரவு நேர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இங்குள்ள சில இரவு நேர ஓட்டல்களில் கெட்டுப் போன உணவுகள், சால்னா, இறைச்சிகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ்.மங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தருமர் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அதிக நிறம் ஏற்றப்பட்ட சிக்கன் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபதாரம் விதித்தனர். உணவுப் பொருள்களில் அதிக நிறம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்தனர்.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும், உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியாக இருந்தால் புதுப்பிக்க வலியுறுத்தியும், ஓட்டல் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.