நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் 60 ரேஷன் கடைகளும், 25 பகுதி நேர ரேஷன் கடைகளும் உள்ளன. 39 ஆயிரத்து 400 கார்டுதாரர்கள் உள்ளனர். அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி திருவாடானை, தொண்டி பகுதியில் ரேஷன் கடைகளை ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு நிலை, மக்களுக்கு தங்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கபடுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திருவாடானை தாலுகாவில் ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்படுகிறது என்றார்.