/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2024 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: கோல்கட்டாவில் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முன்பு உணவு இடைவேளையின் போது நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், டாக்டர்கள் பாதுகாப்பு சட்டம் கோரி நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.ராமநாதபுரம் கிளை செயலாளர் பிரதாப், பொறுப்பாளர் சேசு பங்கேற்றனர்.