/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் நெல் விதைப்பு பணி தீவிரம் விதை நெல் விலை உயர்வால் கவலை

ADDED : செப் 07, 2024 05:18 AM

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நெல் விதைப்பு பணிகள் துவங்கிய நிலையில் விதை நெல் விலை உயர்வால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் மழையை பயன்படுத்தி விளை நிலங்களை விதைப்பு செய்வதற்கு ஏற்ற வகையில் உழவு செய்து தயார் நிலையில் வைத்திருந்த விவசாயிகள் தற்போது நேரடி நெல் விதைப்பு பணியை துவக்கியுள்ளனர்.
கிளியூர், அஞ்சுகோட்டை, வாணியேந்தல், ஆலம்பாடி, குஞ்சங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேரடி நெல் விதைப்பை தீவிரபடுத்தியுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: விதைப்பு பணியை துவக்கியுள்ளோம். ஆனால் விதை நெல் விலை உயர்ந்துள்ளதால் கவலையாக உள்ளது. 30 கிலோ ஆர்.என்.ஆர்., நெல் விதை ரூ.1150க்கும், என்.எல்.ஆர்., ரூ.950க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து வகை நெல் விதைகளும் ரூ.50 முதல் 100 வரை விலை உயர்ந்துள்ளது.
ஆண்டுதோறும் விதை நெல், உரம், பூச்சி மருந்து விலை உயர்வு கவலை அளிக்கிறது என்றனர்.