/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சர்வதேச நீர் விளையாட்டு மையம் பிரப்பன்வலசையில் பணி துவக்கம்
/
சர்வதேச நீர் விளையாட்டு மையம் பிரப்பன்வலசையில் பணி துவக்கம்
சர்வதேச நீர் விளையாட்டு மையம் பிரப்பன்வலசையில் பணி துவக்கம்
சர்வதேச நீர் விளையாட்டு மையம் பிரப்பன்வலசையில் பணி துவக்கம்
ADDED : பிப் 26, 2025 02:03 AM
ராமநாதபுரம்,:ராமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ.,யில் அரியமான், பிரப்பன்வலசை கடற்கரைகள் உள்ளன. இங்குள்ள கடலில் 50 அடி வரை ஆழம் இருக்காது. படகு சவாரியும் உள்ளது. இதனால் குழந்தைகளுடன் மக்கள் பொழுது போக்க இங்கு அதிகளவில் வருகின்றனர்.
ராமநாதபுரம்- - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இக்கடற்கரை அமைந்துள்ளதால் சுற்றுலாப்பயணியர் வந்து செல்ல ஏதுவாக உள்ளது. இந்நிலையில், பிரப்பன்வலசையில் சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.
கடற்கரை மண்ணின் தன்மை, நீரோட்டத்தின் வேகம் ஆகியவை இதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு, 42 கோடியில் வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் பல்வேறு நீர் விளையாட்டு திட்டங்கள், பாதுகாப்பு நெறிமுறைகளை வழிவகுத்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் வீரர்களுக்கு பயிற்சியளிக்க, 7 ஏக்கரில் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக, இக்கட்டுமான பணிகளுக்காக நிலம் அளவீடு செய்துள்ளனர். அங்கு கட்டுமான பணிக்காக மரங்களை அகற்றுவதற்காக வனத்துறையினரிடமும் அனுமதி கோரியுள்ளனர். தனி அலுவலகம், பயிற்சியாளர்கள், வீரர்கள் தங்கும் விடுதிகள் போன்றவையும் அமைக்கப்பட உள்ளன.
நீர் விளையாட்டு மையத்தை, 2026ல் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

