/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தினம்
/
பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தினம்
ADDED : ஜூன் 22, 2024 05:04 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளிலும் தனியார் அமைப்புகள் சார்பிலும் சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது.
* ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் சகுந்தலா முன்னிலை வகித்தார். முதல்வர் டாக்டர் ரஜினி துவக்கி வைத்தார்.நல்லாசிரியர் விருது பெற்ற சர்வதேச யோகா நிபுணர் பத்மநாதன் யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறி சில யோகாசனங்களையும் மாணவர்களை செய்ய பயிற்சி அளித்தார். திட்ட அலுவலர் மலர்விழி, தமிழ் துறை பேராசிரியர்கள் அங்கயற்கண்ணி, காவிகா, மாணவர்கள் பங்கேற்றனர்.
* செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரியில் நாட்டுநலப்பணி திட்டம், நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினவிழா நடந்தது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, நிர்வாகி ராஜாத்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சர்வ தேச யோகா நிபுணர் பத்மநாபன், பதஞ்சலி யோக மையம் பயிற்சி ஆசிரியர் சரவணன் யோகாசனத்தின் நன்மைகள் குறித்து பேசினர். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் பாத்திமா சானாஸ் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர்கள் தமிழகன், ஜெய்கணேஷ், பிரதீப், ராஜேஷ், நேருயுவகேந்திரா பரமேஸ், உடற்கல்வி இயக்குனர் சவேரியார், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் அருணா தேவி, நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு அண்ணாதுரை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வட்டாரக்கல்வி அலுவலர் ராமநாதன் தலைமை வகித்தார். தலைமைாசிரியர் ஜெயந்தி வரவேற்றார். ராமநாதபுரம் எஸ்.சி.கே.எஸ்., பிராண சிகிச்சை மையம் சார்பில் யோகாசன பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் குணசேகரன், மாதவி பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் கலெக்டர் வளாகத்தில் நேரு யுவகேந்திரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம் மற்றும் மல்லர் கயிற்றில் மாணவர்கள் யோகாசனங்களை செய்து காட்டினார்.
*ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு தலைமை வகித்து துவக்கி வைத்தார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தமராஜ், விரைவு மகிளா நீதிபதி கோபிநாத், கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி அகிலாதேவி, மாஜிஸ்திரேட்கள் நிலவேஸ்வரன், பிரபாகரன், வழக்கறிஞர் சங்கத்தலைவர் ேஷக் இப்ராஹிம், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர். யோகா குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
*ராமநாதபுரம் பிரம்மா குமாரிகள் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு மற்றும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் வித்யாலயத்தின் கிளை நிலைய பொறுப்பு சகோதரி பிரம்ம குமாரி ராஜலட்சுமி தலைமை வகித்தார். ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் ஊர்வலம் துவங்கி கேணிக்கரையில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தின் போது போதை, புகை ஒழிப்பு தினத்தின் மையக்கருத்தை உள்ளடக்கி விழிப்புணர்வு அடங்கிய நோட்டீஸ் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. வித்யாலயத்தை சார்ந்தவர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
*கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் சேக் தாவூது தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெ.கணேஷ் குமார் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் பங்கேற்று யோகாசனங்களை பயிற்றுவித்தார்.
* திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடை அமிர்தா வித்யாலயம் பள்ளியில் யோகாசன முறைகளை கூட்டமாக செய்து காண்பித்தனர். பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா தலைமை வகித்தார். முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பாலவேல் முருகன், சிறப்பு விருந்தினராக உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நிகழ்ச்சிக்கு முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். பயிற்சியாளர் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மணிமேகலை உட்பட பலர் பங்கேற்றனர்.
* பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பிரமணியன், நீதித்துறை நடுவர் பாண்டிமகாராஜா மற்றும் வக்கீல்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
* பரமக்குடி மவுண்ட் லிட்ரா ஜி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்கள் பிரமிடு அமைப்பை ஏற்படுத்தி காட்டினர்.
* பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் மனவளக்கலை மன்றம் சார்பில் யோகா நடந்தது. புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி, ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி என பல்வேறு பள்ளிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
*முதுகுளத்துார் அருகே செல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேரு யுவகேந்திரா மற்றும் செல்லுார் தியாகி இமானுவேல் சேகரன் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து யோகா தின விழா நடத்தினர். தலைமையாசிரியர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மாரியம்மாள், கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் மேகநாதன் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து ஆசிரியர் திருமலை விளக்கினர். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தன்னார்வலர் சரவணகுமார் நன்றி கூறினார்.
*கடுகுச்சந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ராஜேஷ் வின்சென்ட் ஜெய்சிங் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பிரபு இம்மானுவேல் வரவேற்றார். மாணவர்கள் யோகாசனம் செய்தனர். யோகாவின் பயன்கள் குறித்து யோகா பயிற்சி ஆசிரியர் செலஸ்டின் மகிமைராஜ் விளக்கினார். ஆசிரியர் லட்சுமணன் நன்றி கூறினார். ஆசிரியைகள் திவ்யா, பாரதி, இளநிலை உதவியாளர் சரவணகுமார் மற்றும் சாந்தி பங்கேற்றனர்.