ADDED : ஏப் 12, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓய்வுபெற்ற கலெக்டரின்நேர்முக உதவியாளர்துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
துாத்துக்குடி மாவட்டம் டூவிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் 78. இவர் ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
ராமநாதபுரம் சேதுபதி நகரில் தற்போது குடியிருந்து வந்தார். 10 ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை தங்கியிருந்த அறையில் இருந்து எழுந்து வரவில்லை. அவரது அறையில் சென்று பார்த்த போது அங்கு அவர் நுால் கயிற்றில் துாக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது. இவரது மகன் செல்வக்குமார் புகாரில் ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

