/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.1.89 கோடி கையாடல் வழக்கு கருவூல ஊழியர்களிடம் விசாரணை
/
ரூ.1.89 கோடி கையாடல் வழக்கு கருவூல ஊழியர்களிடம் விசாரணை
ரூ.1.89 கோடி கையாடல் வழக்கு கருவூல ஊழியர்களிடம் விசாரணை
ரூ.1.89 கோடி கையாடல் வழக்கு கருவூல ஊழியர்களிடம் விசாரணை
ADDED : ஏப் 28, 2024 01:56 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம், முதுகுளத்துார் கருவூலங்களில் நடந்த ரூ.1.89 கோடி கையாடல் வழக்கில் கருவூல ஊழியர்களிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக பணிபுரிந்தவர் கீழத்துாவல் முனியாண்டி மகன் முனியசாமி 37. இவர் ராமநாதபுரம், முதுகுளத்துார் கருவூலத்தில் ஓய்வூதியர்கள் கணக்கில் இருந்த 1.89 கோடி ரூபாயை கருவூல ரகசிய குறியீட்டை பயன்படுத்தி கையாடல் செய்தார். தணிக்கையில் இது தெரியவந்தது. மாவட்ட கருவூல அலுவலர் சேஷன் இது குறித்து புகார் செய்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். முனியசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் போலீசார் இந்த வழக்கில் முனியசாமியுடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் குறித்தான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். கையாடல் குறித்து கண்டறிந்த தணிக்கை குழுவினர் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
நேற்று போலீசார் முன் தணிக்கை குழுவினர் 6 பேர் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் முனியசாமி கையாடல் குறித்து விபரங்களை கேட்டறிந்து பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.

