/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு புத்தகக் கிடங்கில் திருடுபோன நோட்டுகள் மீட்பு கடைக்காரரிடம் விசாரணை

ADDED : மே 09, 2024 02:41 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே அரசு புத்தக கோடவுனில் திருடுபோன ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள கிராப் நோட்டுகளை பழைய இரும்பு கடையிலிருந்து மீட்ட போலீசார் விற்றவர்கள் குறித்து கடை உரிமையாளரிடம் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 128 பள்ளிகளுக்கான நோட்டு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள புத்தகக் கிடங்கு உள்ளது. இங்கு பின் பக்க கதவை உடைத்து தலா 180 கிராப் நோட்டுகள் உள்ள 12 பெட்டிகளை ஆட்டோவில் வந்த மூன்று மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து மாவட்டக்கல்வி அலுவலர் சுதாகர் புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரித்தனர். இதில், பாரதிநகரில் பழைய இரும்பு கடையில் கிராப் நோட்டுகள் விற்றது தெரிய வந்தது. அவற்றை மீட்டு கடை உரிமையாளர் கனிராஜனிடம் விற்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.