/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவகங்கையில் கம்பன் விழா கவர்னருக்கு அழைப்பு
/
சிவகங்கையில் கம்பன் விழா கவர்னருக்கு அழைப்பு
ADDED : செப் 06, 2024 04:54 AM

ராமேஸ்வரம்: சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் நடக்கும் கம்பன் கழக விழாவில் கவர்னர் பங்கேற்பதற்கு நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
ஆக.12 ராமேஸ்வரத்தில் நடந்த கம்பன் கழக விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இதையடுத்து ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், செயலாளர் நந்தகோபால், பொருளாளர் ராமு, புதுக்கோட்டை கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார், சிவகங்கை நாட்டரசன்கோட்டை கம்பன் நினைவிடம் உரிமையாளர் அருணாச்சலம், முன்னாள் தலைமை ஆசிரியர் கமலா ஆகியோர் கவர்னர் ரவியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் அடுத்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் நினைவிடத்தில் விரிவான விழா நடத்த உள்ளதால் இவ்விழாவிற்கு கவர்னர் வருகை தர வேண்டி அழைப்பு விடுத்தனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பேச்சு, கட்டுரை போட்டிகள், இலக்கிய மன்றம், கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது என ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன் தெரிவித்தார்.