/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஊழியர் வரி பிடித்தத்தில் குளறுபடி
/
அரசு ஊழியர் வரி பிடித்தத்தில் குளறுபடி
ADDED : மே 22, 2024 03:29 AM
ராமநாதபுரம் : தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பள பில்லில் வருமான வரி பிடித்தம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு (ஐ. எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென வழங்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று சம்பளம் பற்றிய விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதனை சம்பந்தப்பட்ட துறை கணக்கு அலுவலர்கள் சரி பார்த்து சம்பளம் வழங்கும் அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள். அதிகாரிகள் ஒப்புதல் அனுப்பிய பிறகு கருவூலம் சம்பள பில்லை சரி பார்த்த பின் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.
கடந்த இரு மாதங்களாக சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தத்தில்பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. வரி கட்ட தேவையில்லாதவரின் சம்பளத்தில் ரூ.6000 வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதம் பெரும்பான்மையோருக்கு வருமான வரிபிடித்தம் செய்யப்படவில்லை. ஒரு மாதத்திற்கான வீட்டு வாடகைப்படி மட்டுமே கழிக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கான வீட்டு வாடகை கழிக்கப்படவில்லை. வருமான வரி பிடித்தம் செய்யப்பட வேண்டியவர்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படாமல் சம்பள பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

