ADDED : ஆக 24, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் உள்ள தடாதகை பிராட்டி சமேத ஈஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இக்கோயிலில் கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகள் துவங்கி மகாபூர்ணாகுதி நடந்தது. கோயில் விமான கலசங்களில் புனிநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களின் ஹர ஹர, சிவ சிவ கோஷங்களுக்கு மத்தியில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.