நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி,- கமுதியில் வேளாண்மைத்துறை, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தலைமை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் பாஸ்கரமணியன் முன்னிலை வகித்தார். இதில் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் குறித்தும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி, மதிப்பு கூட்டுதல் குறித்து விளக்கம் அளித்தனர். பின்பு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. உடன் சேதுசீமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம் ரிலையன்ஸ் அறக்கட்டளை மாவட்ட மேலாளர் கிருபா, விவசாயிகள் பங்கேற்றனர்.