/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மன்னார் வளைகுடா கடற்கரையோரம் ரோந்து பணியை அதிகரிப்பது அவசியம் இரு மாதங்களில் அதிகளவு கடத்தல் பொருள் பறிமுதல்

ADDED : மார் 06, 2025 03:10 AM
கீழக்கரை : மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இரண்டு மாதங்களில் அதிகளவு கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்னும் ரோந்து பணியை அனைத்து துறையினர் அதிகரிப்பது அவசியமாகிறது.
மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் பீடி இலை, கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், இஞ்சி, சுக்கு, மஞ்சள் மூடைகள், போதை வஸ்துகள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தும் செயல் தொடர்கிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இலங்கைக்கு கடல் வழியாக கடத்தும் பொருள்களை தென்னந்தோப்புகளில் பதுக்கி வைத்து மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களை பயன்படுத்தி கடத்துகின்றனர்.
கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நெட்வொர்க்கை கண்டறிவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கத்துறை, மரைன் போலீசார், போதைப்பொருள் கடத்தல் நுண் பிரிவு போலீசார், க்யூ பிரிவு போலீசார் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து கூட்டு ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிராமங்கள் தோறும் போதை ஒழிப்பு குறித்த உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசு அலுவலர்களுடன், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து குழுவாக இயங்கினால் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கலாம் என்றனர்.