/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் மீது கார் மோதி குழந்தை பலி லிப்ட் கேட்டு சென்ற போது பரிதாபம்

ADDED : ஜூன் 27, 2024 02:17 AM
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் பன்னீர்குளத்தைச்சேர்ந்தவர் அருண்குமார். கூலித் தொழிலாளியான இவர் வெளியூரில் உள்ளார். இவரது மனைவி முனீஸ்வரி, இரண்டரை வயது பெண் குழந்தை அர்ச்சனாதேவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பார்த்திபனுார் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து திரும்பிய போது முனீஸ்வரியின் உறவினர் வடுகநாதபுரம் முத்துக்குமார், நண்பர் கருப்புச்சாமி உள்ளிட்டோர் டூவீலரில் லிப்ட் கொடுத்து அழைத்து சென்றனர். அதில் நால்வர் பயணித்த நிலையில் நரிக்குடி ஜங்ஷன் பகுதியில் எதிரில் மதுரை நோக்கி சென்ற கார் மீது டூவீலர் மோதியது.
இந்த விபத்தில் குழந்தை அர்ச்சனாதேவி சம்பவ இடத்திலேயே பலியானது. கார் பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் டிரைவர் முதுகுளத்துார் முனியசாமி உட்பட அதில் இருந்த 4 பேர் காயமடைந்தனர். முனீஸ்வரி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.