/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜெ., பிறந்தநாள் விழா அ.ம.மு.க., கூட்டம்
/
ஜெ., பிறந்தநாள் விழா அ.ம.மு.க., கூட்டம்
ADDED : பிப் 25, 2025 06:59 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரண்மனையில் மாவட்ட அ.ம.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் தினகரன் முன்னாள் முதல்வர்கள் ஜெ., எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தி பேசினார்.
துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, அ.ம.மு.க., மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை, தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் ஜெசிமா பானு, மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் கபிலன், ஒன்றியச் செயலாளர் முத்தீஸ்வரன் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகர செயலாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.