/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்பகையில் கையை வெட்டிய வழக்கில் 7 பேருக்கு ஜெயில்
/
முன்பகையில் கையை வெட்டிய வழக்கில் 7 பேருக்கு ஜெயில்
முன்பகையில் கையை வெட்டிய வழக்கில் 7 பேருக்கு ஜெயில்
முன்பகையில் கையை வெட்டிய வழக்கில் 7 பேருக்கு ஜெயில்
ADDED : ஏப் 24, 2024 06:08 AM
முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முன்பகையில் ஏற்பட்ட மோதலில் மருதுபாண்டி என்பவரின் கையை வெட்டிய வழக்கில் முதுகுளத்துார் நீதிமன்றத்தில் ஏழு பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
கமுதி அருகே அம்மன்பட்டியை சேர்ந்தவர் மருதுபாண்டி 35. இவரை 2014ல் முன்பகையில் கமுதி கோட்டைமேடு கல்லுாரி அருகே சிலர் கையை வெட்டினர்.
கமுதி போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கு விசாரணை முதுகுளத்துார் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கில் சார்பு நீதிபதி ராஜாகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில் அம்மன்பட்டி சரவணன் 42, எனபவருக்கு 5 ஆண்டு சிறை, ரூ.2000 அபராதம் விதித்தார். ஏ.தரைக்குடி லட்சுமணன் 50, திருமூர்த்தி 45, தாமோதரன் 36, காளிமுத்து 37, அம்மன்பட்டி சித்திரைசாமி 38, நத்தக்குளம் பூமி 45, ஆகிய 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

