/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் ஜமாபந்தி நிறைவு
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் ஜமாபந்தி நிறைவு
ADDED : ஜூன் 14, 2024 04:38 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் மூன்று நாட்களாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடந்த ஜமாபந்தி நேற்று மாலை நிறைவடைந்தது.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் ஜூன் 11 முதல் ஜமாபந்தி கணக்குகள் சரிபார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. ஜூன் 11ல் ஆனந்துார் உள் வட்டத்திற்கு உட்பட்ட 11 வருவாய் கிராமங்களுக்கும், மறுநாள் ஆர்.எஸ். மங்கலம் உள் வட்டத்திற்கு உட்பட்ட 13 வருவாய் கிராமங்களுக்கும், நேற்று சோழந்தூர் உள்ள வட்டத்திற்கு உட்பட்ட 15 வருவாய் கிராமங்களுக்கும் கிராம கணக்குகள் சரிபார்க்கப்பட்டு அப்பகுதி மக்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, கணினி திருத்தம் மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் பாலகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.