/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நிதியுதவி கோரிக்கை
/
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நிதியுதவி கோரிக்கை
ADDED : மே 09, 2024 05:08 AM
ராமநாதபுரம்: பாம்பன் குந்துகால் கடலில் மூழ்கி இறந்த மீனவ வாலிபர் முஜாஹித் 18, குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் நிதி உதவி வழங்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வலியுறுத்தினார். அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாம்பனை சேர்ந்த மீனவ தொழிலாளி ஜாஹிர் உசேன். இவரது மகன் முஜாஹித் மீன்பிடி கூலியாக வேலை பார்த்தார். மே 7 ல் மீன்பிடி சாதனம் ஒன்றை மீட்க பாம்பன் கடலில் இறங்கிய போது ராட்சத அலையில் சிக்கினார். அவரை தேடிய நிலையில் நேற்று காலை உடல் மீட்கப்பட்டது. எனவே மகனை இழந்துவாடும் மீனவர் குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ.10 லட்சம்வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் எனறார்.