/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜெ., பிறந்த நாள் விழா மலர் துாவி மரியாதை
/
ஜெ., பிறந்த நாள் விழா மலர் துாவி மரியாதை
ADDED : பிப் 25, 2025 07:08 AM
முதுகுளத்துார்: கமுதியில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
கமுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெ., படத்திற்கு நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, ராஜேந்திரன், கருமலையான், அவைத்தலைவர் சேகரன், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட அம்மா பேரவை செந்துாரான் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். இதேபோன்று முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் ஜெ., படத்திற்கு அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் எம்.பி., தர்மர் தலைமையில் நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர்.
அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., மன்ற துணைச்செயலாளர் பாண்டியன், முதுகுளத்துார் ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், கர்ணன், கருப்புசாமி, நகர செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர்.

