ADDED : ஜூலை 18, 2024 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் நுார் ஆனியா தெருவை சேர்ந்தவர் கலந்தர் அப்பாஸ் 42. சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார்.
ஜூலை 13ல் வீட்டிற்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.3500 பணம் திருடு போனது தெரிந்தது.
கலந்தர் அப்பாஸ் புகாரில் எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., பாலமுருகன் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட சோழகன்பேட்டை பழனி 31, வேலங்குடி பாண்டி 28, திருநாவுக்கரசு 38, ஆகிய மூவரை கைது செய்து நகையை மீட்டார்.