ADDED : ஜூலை 22, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியல் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்க விழா,மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர் மல்லிகா தலைமைவகித்தார். தலைமை ஆசிரியர் நவரத்தினம் முன்னிலை வகித்தார். இந்தியன் ரெட்கிராஸ் பொருளாளர் குணசேகரன், மண்டபம் ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் பாலமுருகன் ஆகியோர் ரெட்கிராஸ் செயல்பாடுகள், ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்து பயிற்சி அளித்தனர்.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட ஜூனியர்ரெட் கிராஸ் கன்வீனர் ரமேஷ் செய்திருந்தார்.