/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குதிரை எடுப்பு விழாவில் கபடி போட்டி
/
குதிரை எடுப்பு விழாவில் கபடி போட்டி
ADDED : ஆக 15, 2024 03:57 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் கிராமத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு அம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, துாத்துக்குடி, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் ப்ரோ கபடி விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. முடிவில் அருப்புக்கோட்டை அணி முதல் பரிசு, முன்னேந்தல் அணி இரண்டாம் பரிசு, விளங்குளத்தூர் அணி மூன்றாம் பரிசும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு,கோப்பைகளை வழங்கினர். ஏற்பாடுகளை விளங்குளத்துார் அம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப், கிராமமக்கள் செய்தனர்.