ADDED : ஜூலை 31, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, : கீழக்கரை செய்யது ஹமிதா கலை- அறிவியல் கல்லுாரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ் முன்னிலை வகித்தார்.
கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆற்றிய பணிகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கணிதவியல் துறைத் தலைவர் ஜேசுதுரை, உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம், ஆங்கிலத் தறைத்தலைவர் சுலைமான், வணிகவியல் துறை பேராசிரியர் முனிய சத்தியா உட்பட பலர் பங்கேற்றனர்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சதாம் உசேன் நன்றி கூறினார்.