/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்று ராமேஸ்வரத்தில் கலாம் நினைவகம் மூடல்
/
இன்று ராமேஸ்வரத்தில் கலாம் நினைவகம் மூடல்
ADDED : ஏப் 19, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவகம் இன்று(ஏப்.19) ஒரு நாள் மட்டும் மூடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவகத்தில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால் நினைவகத்தை மூட டி.ஆர்.டி.ஓ., எனும் ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு உத்தரவிட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் இன்று அப்துல்கலாம் நினைவகம் வருவதை தவிர்த்து நுாறு சதவீத ஓட்டளிக்க வேண்டும் என நினைவகம் ஊழியர்கள் தெரிவித்தனர்.

