ADDED : மே 16, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. மே 7ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
நாள்தோறும் மூலவர் காமாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மே 14ல் 501 விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
நேற்று காலையில் நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குடம் எடுத்து சாயல்குடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை சாயல்குடி விஸ்வகர்மா உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.