/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனைக்குளம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
/
பனைக்குளம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 18, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் நடத்தப்பட்ட சதுரங்க போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
பனைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஐந்தாவது சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் முத்துமாரி தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரிரான சதுரங்க பயிற்சியாளர் மணிகண்டன் வரவேற்றார்.
பரிசுகளை தலைமையாசிரியர் முத்துமாரி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வழங்கினர். இடைநிலை ஆசிரியர் ராஜா ஒருங்கிணைத்தார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.