ADDED : மார் 09, 2025 04:08 AM

பரமக்குடி : பரமக்குடி அருகே கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தலைமையாசிரியர் சக்தி தலைமை வகித்தார். தமிழாசிரியர் தேவசேனா ஆண்டறிக்கை வாசித்தார். பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி மாணவர்களுக்கு பரிசளித்து பேசினார்.
மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் செந்தில்குமார், ராமர், முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் விஜி மாலா, சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயபிரகாஷ் வாழ்த்தினர்.
ஆங்கில ஆசிரியர் சகாயமாலா, அறிவியல் ஆசிரியர் ஜமுனா தொகுத்தனர். கலை நிகழ்ச்சிகளை கணித ஆசிரியர் ஆனந்தன்,இளநிலை உதவியாளர் பிரபாகரன், ஆய்வக உதவியாளர் பூமி லதா, ஓவிய ஆசிரியர் அமுதா ஒருங்கிணைத்தனர். சமூக அறிவியல் ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.
இப்பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் ஸ்மார்ட் போர்டு, டி.வி., ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வசதியுடன் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம் சிறப்பு கையெழுத்து பயிற்சியும், சி.சி.டி.வி., கேமரா வசதியும் உள்ளது.