/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடி கடலில் மூழ்கி காரைக்குடி வாலிபர் பலி
/
தனுஷ்கோடி கடலில் மூழ்கி காரைக்குடி வாலிபர் பலி
ADDED : ஆக 24, 2024 02:16 AM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடலில் மூழ்கி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அரவிந்த் 29, பலியானார்.
காரைக்குடியைச் சேர்ந்த சங்கர் மகன் அரவிந்த். இவர் நண்பர்கள் கவியரசன், கார்த்திக் ஆகியோருடன் நேற்று முன்தினம் டூவீலரில் ராமேஸ்வரம் வந்தார்.
இங்குள்ள விடுதியில் தங்கி விட்டு நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்றனர்.
அங்கு குளித்து விளையாட முயன்றபோது, அவர்களை போலீசார் எச்சரித்து விரட்டினர்.
அங்கிருந்து கிளம்பி தனுஷ்கோடியில் 1964 புயலில் இடிந்த சர்ச் அருகில் உள்ள தென்கடலான மன்னார் வளைகுடா கடற்கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தனர்.
ஆனால் கடலின் ஆபத்தை உணராமல் அரவிந்த் கடற்கரையில் இறங்கிய போது ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றதால், அவர் மூழ்கி உயிரிழந்தார்.
மீனவர்கள் உதவியுடன் தனுஷ்கோடி மரைன் எஸ்.ஐ., காளிதாஸ், போலீசார் அரவிந்த் உடலை மீட்டனர்.