/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் கார்கில் வெற்றி 25ம் ஆண்டு கொண்டாட்டம்
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் கார்கில் வெற்றி 25ம் ஆண்டு கொண்டாட்டம்
பாலிடெக்னிக் கல்லுாரியில் கார்கில் வெற்றி 25ம் ஆண்டு கொண்டாட்டம்
பாலிடெக்னிக் கல்லுாரியில் கார்கில் வெற்றி 25ம் ஆண்டு கொண்டாட்டம்
ADDED : ஜூலை 27, 2024 05:24 AM

கீழக்கரை, : கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் என்.சி.சி., தரைப்படை மற்றும் கப்பற்படை, என்.எஸ்.எஸ்., ஆகியவை இணைந்து கார்கில் போர் வெற்றியின் 25ம் ஆண்டை கொண்டாடினர்.
கார்கில் போரில் வீர மரணமடைந்த இந்திய போர் வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் பெயரில் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கார்கில் போரின் வெற்றி குறித்த குறும்படம் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. கல்லுாரியின் துறைத் தலைவர்கள் உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை என்.சி.சி., அலுவலர்கள் மருதாச்சலமூர்த்தி, வினோத், என்.எஸ்.எஸ்., அலுவலர் ராஜேஷ் கண்ணா செய்திருந்தனர்.