ADDED : ஆக 25, 2024 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி,: பரமக்குடி புதுநகர் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து மண்டல அபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் கருப்பண்ண சுவாமி 18 படி மீது எழுந்தருளி உள்ளார். இங்கு வராஹி அம்மன் உட்பட பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுஉள்ளது. ஜூலை 7ல் கும்பாபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து மண்டல பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டுநேற்று காலை மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி ஹோமங்கள் நிறைவடைந்து மகாபூர்ணாகுதிக்கு பின் கருப்பண்ண சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
ஏற்பாடுகளை வெள்ளை குதிரை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.