/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டு எமனேஸ்வரம் கண்மாயை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
/
காட்டு எமனேஸ்வரம் கண்மாயை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
காட்டு எமனேஸ்வரம் கண்மாயை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
காட்டு எமனேஸ்வரம் கண்மாயை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 30, 2024 10:48 PM

ராமநாதபுரம், - கமுதி தாலுகா பெரிய ஆனைக்குளம் காட்டு எமனேஸ்வரம் கண்மாயில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி துார்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட காவிரி-வைகை-கிருதுமால்- குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், மாவட்டச் செயலாளர் மலைச்சாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: பெரிய ஆனைக்குளத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டு எமனேஸ்வரத்தில் கண்மாயில் தண்ணீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றி துார்வார வேண்டும்.
கண்மாய் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.