ADDED : ஆக 29, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனகோட்டை ஜெக மாரியம்மன், பிடாரியம்மன் கோயில் 51ம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது.
முளைப்பாரிகளை பக்தர்கள் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற முளைப்பாரிகளை குளக்கரையில் கொட்டி வழிபாடு செய்தனர். கோயிலின் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இரவில் பெண்கள் கும்மியாட்டம் ஆடினர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.

