/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் தெரிந்த இலங்கை காற்றாலைகள்
/
தனுஷ்கோடியில் தெரிந்த இலங்கை காற்றாலைகள்
ADDED : மே 14, 2024 07:56 PM

ராமேஸ்வரம்:-இலங்கை தலைமன்னாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் நின்றபடி சுற்றுலாப் பயணியர் கண்டு ரசித்தனர்.
இலங்கை - சீனா இணைந்து இலங்கையில் தலைமன்னார், நெடுந்தீவு, யாழ்ப்பாணம், முல்லைதீவு உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றாலைகள் அமைத்துள்ளன. இதில், தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து, கடலில், 35 கி.மீ., துாரமுள்ள தலைமன்னார் கடலோரத்தில் 30 காற்றாலைகள் உள்ளன.
தற்போது நிலவும் கோடை வெயில் காரணமாக, வானம் தெளிவாக இருப்பதால், தலைமன்னாரில் உள்ள காற்றாலைகள், தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து பார்க்கும் போது பளிச்சென தெரிகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணியர் கண்டு ரசித்தனர்.
'மே, ஜூன் 10 வரை மட்டுமே இவை தெரியும். அதன் பின், தென் மேற்கு பருவக்காற்று வீசத் துவங்கினால் தெரியாது' என தனுஷ்கோடி மீனவர்கள் தெரிவித்தனர்.

