/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயில் வருடாந்திர உற்ஸவ விழா
/
கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயில் வருடாந்திர உற்ஸவ விழா
கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயில் வருடாந்திர உற்ஸவ விழா
கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயில் வருடாந்திர உற்ஸவ விழா
ADDED : மே 10, 2024 11:23 PM

சாயல்குடி : சாயல்குடி அருகே கூராங்கோட்டையில் தர்ம முனீஸ்வரர் கோயில் வருடாந்திர உற்ஸவ விழா நடந்தது.
மூலவர் தர்ம முனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கூராங்கோட்டை அருகே உள்ள மலட்டாற்று கரையில் பச்சை பல்லக்கில் பவனி வந்து, தீர்த்தவாரி உற்ஸவமும், நேர்த்திக்கடன் பக்தர்களால் அலகு குத்தி, பால்குடம் காவடி எடுத்து வந்தனர்.
பறவை காவடி வீதி உலா
மாலை 5:00 மணிக்கு சாயல்குடி நகரில் இருந்து கூராங்கோட்டை வரை குதிரை எடுப்பு விழாவும் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு அய்யனாருக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டுதலும், இரவில் வள்ளி திருமணம் நாடகம் நடக்கிறது.
தொடர்ந்து இரண்டு நாள் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கூராங்கோட்டை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.