ADDED : ஆக 27, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் ; கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ். மங்கலத்தில் கிருஷ்ணர் ஊர்வலம் நடந்தது.
புல்லமடை ரோட்டில் இருந்து துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக செட்டியமடை வரை சென்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கிருஷ்ணர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு ஊர்வலமாகச் சென்றனர். விழாவில் கிருஷ்ண ஜெயந்தி அறக்கட்டளை தலைவர் வேல்முருகன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதே போல் ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை, கூட்டாம்புளி, வரவணி, கொட்டுப்புளி, வாணியக்குடி, சீவலாதி, பாப்பானேந்தல், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.

