/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குதிரைமலையான் கோயில் பாரிவேட்டை
/
குதிரைமலையான் கோயில் பாரிவேட்டை
ADDED : பிப் 28, 2025 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்,: பெரியபட்டினத்தில் உள்ள குதிரைமலையான் கருப்பண்ணசுவாமி கோயிலில் பாரிவேட்டை உற்ஸவ விழா நடந்தது.
நேற்று முன்தினம் சிவராத்திரியை முன்னிட்டு அம்மன் மற்றும் குதிரை மலையான் கருப்பண்ணசாமி, சப்த கன்னியர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பாரிவேட்டை நிகழ்ச்சியை முன்னிட்டு கட்டுச்சோறு பெட்டி துாக்கி வந்து கருப்பண்ணசாமிக்கு படையல் வைத்தனர்.
ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவைகளை பலியிட்டனர். பெண்கள் பொங்கலிட்டனர். ஏராளமானோர் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

