/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெளி மாநிலத்தில் தேர்தல் பணி புரிந்த ஊர்காவல் படை வீரர்களுக்கு பாராட்டு

ADDED : ஜூலை 12, 2024 04:19 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலக கூட்ட அரங்கத்தில் மாவட்டத்தில் இருந்து தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் பணிபுரிந்த ஊர்காவல் படை வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
எஸ்.பி., சந்தீஷ் தலைமை வகித்தார். ஊர்காவல்படை காமாண்டன்ட் டாக்டர் ஜவஹிருல்லா, கூடுதல் எஸ்.பி., அருண் முன்னிலை வகித்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 125 ஊர்காவல் படை வீரர்கள் மற்றும் புதிதாக ஊர்காவல் படையில் சேர்ந்த திருநங்கை குந்தவை உள்ளிட்ட 26 பேருக்கு எஸ்.பி., சந்தீஷ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். எஸ்.பி., பேசியதாவது:
ஊர்காவல் படை வீரர்களின் பணி கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பாக உள்ளது. மாவட்டத்தில் முதல் முறையாக திருநங்கை குந்தவை பணியில் சேர்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் பணி குறித்து திடீர் ஆய்வு செய்யப்படும் அப்போது சரியாக பணி புரியாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
ஊர்காவல் படை வீரர்கள் பலர் பங்கேற்றேனர். பணியில் ஒழுக்கம், கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்றார்.