ADDED : மே 24, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேத்திடல் குமரவடிவேல் கோயில் வைகாசி விழாவை முன்னிட்டு பூக்குழி விழா நடைபெற்றது.
முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.