
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம் ; பெரியபட்டினம் அருகே கரிச்சான்குண்டில் ஊரில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கடந்த செப்., 6ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு கோபூஜை, நாடிச்சந்தனம், பூர்ணாஹுதி உள்ளிட்டவைகளுக்கு பிறகு காலை 10:00 மணிக்கு சித்தி விநாயகர், காந்தாரியம்மன், பால முருகன் கோயில் கோபுர விமான கலசத்தில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.