நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : -முதுகுளத்தூர் அருகே செங்கற்படை கிராமத்தில் உய்யவந்த மாரியம்மன், செகுட்டையனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
யாகசாலை பூஜை செய்து, கும்பநீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர் உட்பட 21 வகை அபிஷேகம் செய்து பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை வளநாடு தெய்வதானம், செங்கற்படை, இந்திரா நகர் கிராம மக்கள் செய்தனர்.
* சனவேலியில், சவுந்தரநாயகி சமேத, அகத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்து பூஜை செய்த கும்பத்தின் புனித நீர் கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது. தீபாராதனையில் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.