/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அழகன்குளம் நர்த்தன விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
/
அழகன்குளம் நர்த்தன விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
அழகன்குளம் நர்த்தன விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
அழகன்குளம் நர்த்தன விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஆக 22, 2024 02:25 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் நர்த்தன விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10:00 மணிக்கு நடப்பதால் விழா ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
தேவிபட்டினம் அருகே அழகன்குளம் நர்த்தன விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஆக.19 ல் அனுக்ஞை, விக்னேஸ்வரர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. மறுநாள் தன பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
விழாவின் தொடர்ச்சியாக நேற்று இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று காலை 10:15 முதல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அழகன்குளம் ஹிந்து சமூக சபை நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.