ADDED : மே 20, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம் : ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே மேலச்சேந்தனேந்தல் குறத்தி அம்மன் கோயில் மற்றும் சோனை கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர், விநாயகர் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், கோ பூஜையும் நடந்தன. பின் புனித நீர் கோயில் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

