/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தலைக்கால் கிராமத்தில் உயிர் பெற்ற குறுங்காடு
/
தலைக்கால் கிராமத்தில் உயிர் பெற்ற குறுங்காடு
ADDED : மே 28, 2024 05:18 AM

பரமக்குடி : பரமக்குடி அருகே தலைகால் கிராமத்தில் குறுங்காடு பராமரிப்பின்றி இருந்ததை தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதன் எதிரொலியாக புத்துயிர் பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் குறுங்காடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பரமக்குடி அருகே தென்பொதுவக்குடி ஊராட்சி தலைக்கால் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறுங்காடு பராமரிக்கப்படாமல் இருந்தது.
இதனால் வேலி அமைத்து இருந்த அப்பகுதி வீணாகிய நிலையில் மே 26ல் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று ஊராட்சி ஒன்றியம் சார்பில் குறுங்காடு மற்றும் நிழல் கூடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பயன் தரும் இது போன்ற திட்டங்களை அனைத்து கிராமத்திலும் பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.