ADDED : மே 02, 2024 05:12 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சி.ஐ.டி.யு., சார்பில் ஆறுஇடங்களில் கொடியேற்றி விழா நடத்தினர்.
ராமநாதபுரம் சி.ஐ.டி.யு., அலுவலகம் முன்பு மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரன் தலைமைவகித்தார். மாவட்ட துணைத்தலைவர் குருவேல் கொடியேற்றினார். ராமநாதபுரம்அரசு புறநகர் பணிமனை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் போஸ்தலைமை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர் மலைராஜன் கொடியேற்றினார். அரசு போக்குவரத்துக்கழக நகர் கிளை பணிமனை முன்பு கிளை தலைவர் ரவிக்குமார்தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் வாசுதேவன் கொடியேற்றினார்.
ராமநாதபுரம் உப மின் நிலையம் முன்பு கோட்டத்தலைவர் ஜெபமணிதலைமையில் மூத்த உறுப்பினர் ரவி கொடியேற்றினார். மின் வாரிய மேற்பார்வைபொறியாளர் அலுவலகம் முன்பு செயற்குழு உறுப்பினர் ராகுல்தலைமையில் பஞ்சாலை சங்க மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பிரமணியன்கொடியேற்றினார்.
ஆட்டோ சங்கத்தலைவர்கள் கண்ணன், ரமேஷ், புறநகர்கிளைச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ராம்குமார், மத்திய சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன்உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

